நியுசிலாந்திற்கு எதிரான 3வது டுவன்டி டுவன்டி போட்டியில் 9 விக்கட்டுக்களால் பாகிஸ்தான் இலகு வெற்றிபெற்றது. 5 போட்டிகளைக் கொண்ட தொடரில் 2 – 1 என நியுசிலாந்து முன்னிலை வகிக்கிறது.
முதலில் துடுப்பெடுத்தாடிய நியுசிலாந்து அணி 19.5 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 204 ஓட்டங்களை பெற்றது. வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் ஒரு விக்கட்டை மாத்திரம் இழந்து 19 ஓவர்களில் இலக்கையடைந்தது.